அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 5 பேர் பலி

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-06-26 01:49 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நாளுக்குநாள் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் நிவாடா மாகாணம் லாஸ் வேகஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு (அந்நாட்டு நேரப்படி) துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது. 57 வயதான எரிக் ஆடம்ஸ் என்ற நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 வயதான சிறுமி படுகாயமடைந்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், துப்பாக்கி சூடு நடத்திய எரிக் ஆடம்ஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து படுகாயமடைந்த சிறுமியை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்