மேலாடையின்றி போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்

ஆணும் பெண்ணும் சமம் என்பதன் அடிப்படையில் எய்லா ஆடம்ஸ் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

Update: 2024-06-26 07:36 GMT

நியூயார்க்,

அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் எய்லா ஆடம்ஸ். இவர் ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு போராட்டங்களை நடத்தி வருகிறார். எப்படி பொது வெளியில் ஆண்கள் மேலாடையின்றி செல்கிறார்களோ அதேபோல பெண்களும் செல்லலாம் என்ற வகையில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவ்வாறு மேலாடையின்றி பல இடங்களுக்கு சென்று, அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது குறித்து எய்லா ஆடம்ஸ் கூறுகையில்,

'பொதுவெளியில் ஆண்கள் மேலாடையின்றி எந்த பயமும் தயக்கமும் இன்றி செல்ல முடியும் என்றால் பெண்களாலும் அவ்வாறு செல்ல முடியும். இதற்கு எதிரான கருத்துடையவர்களை நான் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.

பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள். நான் என்ன செய்கிறேன் என்பதை பெரும்பாலான மக்கள் கவனிக்க மாட்டார்கள். சிலர் மனம் விட்டு சிரித்து கடப்பார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, நியூயார்க் நகரில் பெண்கள் மேலாடையின்றி செல்வது சட்டப்பூர்வமாக உள்ளது,' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்