ஜப்பானில் ரிக்டர் 5.4 அளவில் நிலநடுக்கம் - தலைநகர் வரை அதிர்வுகள் உணரப்பட்டதால் பரபரப்பு

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ வரை உணரப்பட்டது.

Update: 2023-05-11 11:47 GMT

டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் உள்ள தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை 4.16 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ வரை உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்