டெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை விதித்த உக்ரைன்

அரசுக்கு சொந்தமான சாதனங்களில் டெலிகிராம் செயலி பயன்படுத்துவதை உக்ரைன் தடை செய்துள்ளது.

Update: 2024-09-22 02:19 GMT

கோப்புப்படம்

கீவ்,

அரசு மற்றும் ராணுவப் பணியாளர்கள், பாதுகாப்புத் துறை மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சாதனங்களில் டெலிகிராம் செய்தி தளத்தைப் பயன்படுத்துவதைத் உக்ரைன் அரசு தடை செய்துள்ளது.

ரஷியா-உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. அவற்றின் உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.

இந்தநிலையில் சைபர் தாக்குதலுக்கு காரணமாக இருப்பதாக டெலிகிராம் செயலி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதன்மூலம் பயனர்களின் ரகசிய தகவல்களை எதிரி நாடுகள் திருடுவதாகவும் உக்ரைன் ராணுவ புலனாய்வு துறை கூறியது. எனவே அரசாங்கத்துக்குச் சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்