9-வது முறை எம்.பி.யாக பதவியேற்று சாதனை படைத்த ரணில் விக்ரமசிங்கே

1977-ல் முதன் முறையாக ரணில் விக்ரமசிஙகே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.

Update: 2021-06-24 00:42 GMT
கொழும்பு,

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, 9-வது முறையாக எம்.பி.யாக பதவியேற்றுள்ளார். இதன்மூலம் 1977-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் எம்.பி.யாக பதவி வகித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

1977-ம் ஆண்டு முதன் முறையாக ரணில் விக்ரமசிங்கே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அதன்பின்னர் தனது அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் கண்ட ரணில் விக்ரமசிங்கே, 1994-ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்றார். நான்கு முறை அவர் பிரதமராக பதவி வகித்திருக்கிறார். 

இந்நிலையில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, 2020 பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. ரணில் விக்ரமசிங்கேவும் தோல்வி அடைந்தார். எனினும், கட்சி பெற்ற வாக்கு எண்ணிக்கைக்கேற்ப தேசிய பட்டியலிருந்து அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு நேற்று பதவியேற்றார். இதன் மூலம் 72 வயதான ரனில் விக்கிரமசிங்கே, 1977-ம் ஆண்டு முதல் அனைத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் செய்திகள்