இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

Update: 2022-08-23 12:35 GMT

உடுமலை,

இல்லம் தேடிக்கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேவனூர்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னபூலாங்கிணர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உடுமலை அரசுமேல்நிலைப்பள்ளி, ஜல்லிபட்டிஅரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 குறுவள மையங்களில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.

பயிற்சியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை பற்றியும், இல்லம் தேடி கல்வி மையத்தில் கற்பிப்பது என்பது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோன்று உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு, பாடம் சார்ந்த கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் தயாரித்தல், ஒவ்வொரு பாடத்துக்கும் எவ்வாறு கற்றல் கற்பித்தலை சிறப்பாக செய்வது என்பது பற்றிய பயிற்சியை உடுமலை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் உடுமலை வட்டார ஆசிரிய கருத்தாளர்கள் 24 பேர் அளித்தனர். இதில் 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். முகாம் இன்றும் (புதன்கிழமை) நடக்கிறது. இந்த தகவலை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

---

Tags:    

மேலும் செய்திகள்