திருப்பத்தூர்: அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பள்ளி மாணவன் உயிரிழப்பு

திருப்பத்தூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பள்ளி மாணவன் உயிரிழந்தார்.

Update: 2024-12-02 17:02 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூரை அடுத்த பிச்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் குமரன் (17 வயது), மாடப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால் பிச்சனூரில் உள்ள ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது.

இன்று பள்ளி விடுமுறை என்பதனால் குமரன், ஏரியை பார்க்க சென்று கொண்டிருந்தார். வழியில் மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்து கிடந்தது. அதை கவனிக்காத குமரன் எதிர்பாராதவிதமாக மின்கம்பி மீது மிதித்து விட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்