குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தென்காசியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் நெடுவயல் பகுதியைச் சேர்ந்தவர் குத்தால லிங்கம். இவருடைய மகள் தங்கம் (33 வயது). இவருக்கும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் கோவை ஆண்டாக்கா பாளையத்தில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே விரக்தியடைந்த தங்கம் கணவர் வேலைக்கு சென்றபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரவு செந்தில்குமார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டி இருந்தது. தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த செந்தில்குமார் வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தங்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.