அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.;

Update:2024-12-02 19:18 IST

சிதம்பரம்,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. பெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் நேற்று முன் தினம் இரவு மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது.

இந்த பெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நாளை (செவ்வாய்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்