திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது
திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் திருப்பத்தூர்-திருவண்ணாமலை ரோட்டில் உள்ள சி.கே.சி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜ் தலைமை தாங்கினார். ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., ஆவின் மாவட்ட தலைவர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிைல வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.வடிவேல் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக சபாபதிமோகன், எழுத்தாளர் வே.மதிமாறன் ஆகியோர் கலந்துகொண்டு திராவிட இயக்க நூற்றாண்டு வரலாறு, மாநில சுயாட்சி, தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் பற்றி விரிவாக எடுத்து பேசினார்கள்.
இதில் கட்சியின் மாவட்ட துணை செயலாளர்கள் கே.பி.ஆர்.ஜோதிராஜன், ஆ.சம்பத்குமார், மாவட்ட பொருளாளர் டி.ரகுநாதன், ஒன்றிய செயலாளர்கள் கே.முருகேசன், கே.ஏ.குணசேகரன், திருப்பத்தூர் நகரமன்ற தலைவர் வி.சங்கீதா வெங்கடேசன், துணைத்தலைவர் சபியுல்லா, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர்.தசரதன் உள்பட தி.மு.க. இளைஞர் அணியினர் கலந்துகொண்டனர்.