அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

Update: 2024-02-19 04:15 GMT
Live Updates - Page 5
2024-02-19 05:05 GMT

முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

2024-02-19 05:04 GMT

தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ₹5 கோடி ஒதுக்கப்படும்

2024-02-19 04:50 GMT

குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைவதற்காக 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். முதற்கட்டமாக 2024- 25 நிதியாண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.5 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட, சொந்த வீட்டுமனை இல்லாத பயனாளிகளுக்கு இலவச மனை வழங்கப்படும். வீடு கட்டுவதற்கான தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.

2024-02-19 04:48 GMT

தொல்லியல் துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடியில் ரூ.17 கோடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படும். -தங்கம் தென்னரசு

2024-02-19 04:45 GMT

சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இனிவரும் காலங்களில் 600 நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். -தங்கம் தென்னரசு

2024-02-19 04:38 GMT

நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது- நிதியமைச்சர்

2024-02-19 04:34 GMT

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். திருக்குறளை மேற்கோள் காட்டி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அவர், நிதிநிலை அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து உரையாற்றி வருகிறார்.

2024-02-19 04:15 GMT

தமிழ்நாடு சட்டசபையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

இந்நிலையில், தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சுமார் ஒன்றரை மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தடைகளைத்தாண்டி... வளர்ச்சியை நோக்கி’ என்ற கருப்பொருளுடன் தமிழக பட்ஜெட் லட்சினை நேற்று வெளியிடப்பட்டது. ‘7 மாபெரும் தமிழ் கனவு’ என்ற தலைப்பின்கீழ் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப்பயணம், தாய்த்தமிழும் தமிழர் பண்பாடும் என்ற 7 தலைப்புகளில் இந்த பட்ஜெட்டின் சாராம்சம் அமைய உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்