தமிழ்நாடு சட்டசபையின் நடப்பு ஆண்டுக்கான முதல்... ... அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டசபையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
இந்நிலையில், தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சுமார் ஒன்றரை மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘தடைகளைத்தாண்டி... வளர்ச்சியை நோக்கி’ என்ற கருப்பொருளுடன் தமிழக பட்ஜெட் லட்சினை நேற்று வெளியிடப்பட்டது. ‘7 மாபெரும் தமிழ் கனவு’ என்ற தலைப்பின்கீழ் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப்பயணம், தாய்த்தமிழும் தமிழர் பண்பாடும் என்ற 7 தலைப்புகளில் இந்த பட்ஜெட்டின் சாராம்சம் அமைய உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.