கடலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி 600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

கடலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதல் 600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

Update: 2023-02-26 18:45 GMT

7-வது மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கடலூர் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதற்கு சுன்சுகான் இஷின்ரியூ கராத்தே பள்ளி தலைவர் சென்சாய் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருவாரூர் பயிற்சியாளர் செல்லபாண்டியன், குபுடோ பொதுச்செயலாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து இந்த போட்டியில் கடலூர், அரியலூர், திருவாரூர், சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600 பேர் கலந்து கொண்டனர். அவர்களை வயது வாரியாக பிரித்து 8 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கட்டா மற்றும் சண்டை போட்டிகள் நடந்தது. இதில் வீரர்கள், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. பரிசுகளை கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, அரிஸ்டோ பப்ளிக் பள்ளி சேர்மன் சிவக்குமார், முதல்வர்கள் மதுரபிரசாத் பாண்டே, ரங்கநாதன், ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி ஆகியோர் வழங்கினர். இதில் பயிற்சியாளர்கள் ராஜ்குமார், கார்த்திகேயன், அய்யப்பன், மீரான், நூர் முகமது, மொய்தீன், சங்கர், விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்