திருவண்ணாமலை; மண்சரிவில் சிக்கிய 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டது வேதனை அளிக்கிறது - டி.டி.வி.தினகரன்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

Update: 2024-12-02 18:11 GMT

கோப்புப்படம்

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

கனமழை காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் உருண்டு குடியிருப்புகளில் விழுந்ததில் சிக்கியிருந்த 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன.

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அதே நேரத்தில், இனி வரும் காலங்களில் இது போன்ற இயற்கை பேரிடர் சூழலில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்