கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்தநாள் விழா

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2022-10-19 18:53 GMT

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் 134-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாமக்கல்லில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் நினைவு இல்லத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை வரலாறு குறிப்புகளை அவர் பார்வையிட்டார். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் வழக்கம்போல் கவிஞரின் வீரமுழக்க தேசப்பற்று பாடல்கள் இளைஞர்களால் பாடப்பட்டது. இதில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, நகர்மன்ற உறுப்பினர் சரவணன், மாவட்ட நூலக அலுவலர் ரவி, நாமக்கல் கவிஞரின் இளைய சகோதரர் சதாசிவம் பிள்ளையின் கொள்ளு பெயர்த்தி பாபி மகாலிங்கம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வடிவேல், நூலக வாசகர் வட்ட தலைவர் டி.எம்.மோகன், நினைவு இல்ல நூலகர் செல்வம் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்