ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் முடித்து விட்டு ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றார் பிரதமர் மோடி
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்க ரெங்கநாதார் கோவிலில் கருடாழ்வார் சன்னிதி, மூலவர் சன்னிதியில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
ரெங்கநாதர் கோவில் சென்றடைந்தார் பிரதமர் மோடி
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே உள்ள பஞ்சக்கரை பகுதிக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கிருந்து பிரதமர் மோடி கார் மூலம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றடைந்தார்.
பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே உள்ள பஞ்சக்கரை பகுதிக்கு சென்றடைந்தார்.
திருச்சி சென்றடைந்தார் பிரதமர் மோடி...!
சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி சென்றடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 10.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதிக்கு செல்கிறார்.
பிரதமர் மோடியின் பயண விவரம்:-
செனையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி காலை 10.20 மணிக்கு திருச்சி சென்றடைகிறார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 10.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு செல்கிறார்.
சாமி தரிசனம்
பின்னர் அங்கிருந்து அவர் கார் மூலம் காலை 11.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. அதன்பிறகு ரெங்கநாதரை தரிசிக்கும் பிரதமர், கோவிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு நடத்துகிறார். பின்னர் அங்குள்ள மண்டபத்தில் தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தை பாடுகிறார்கள். அதை மோடி கேட்கிறார். அதனுடன் அங்கு நடைபெறும் கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
பின்னர் பகல் 12.50 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பஞ்சக்கரை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, பின்னர் தனி விமானம் மூலம் அவர் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார்.
திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி:
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு விளையாட்டு அரங்கில் ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் பிரதமர் மோடி நேற்று இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கினார்.
இந்நிலையில், பயணத்தின் 2வது நாளான இன்று பிரதமர் மோடி திருச்சி செல்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்ற அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார்.