உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-15 10:28 GMT

சென்னை,

சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிராண்டமாஸ்டர் குகேஷ் 14 சுற்றுகள் முடிவில் 7½-6½ என்ற கணக்கில் உலக சாம்பியனான 32 வயது டிங் லிரெனை (சீனா) வீழ்த்தி புதிய உலக சாம்பியனாக உருவெடுத்தார். அத்துடன் சென்னையை சேர்ந்த 18 வயதான குகேஷ் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை உச்சி முகர்ந்த வீரர் என்ற சாதனையையும் தனதாக்கினார்.

நேற்று முன்தினம் நடந்த பரிசளிப்பு விழாவில் சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் குகேசுக்கு பரிசு கோப்பை, பதக்கத்துடன் ரூ.11½ கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இளம் வயதில் உலக சாம்பியனான குகேசுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷை நடிகர் ரஜினி தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது ரஜினிகாந்துக்கு குகேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்