தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கால்வாய் சுவர் இடிந்ததால் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கடல் நீரை கொண்டு செல்லும் கால்வாய் சுவர் இடிந்து விழுந்ததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-15 12:09 GMT

தூத்துக்குடி,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக மாநகராட்சியில் உள்ள தாழ்வான பகுதிகளில் பெரும்பாலும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

இந்த சூழலில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கடல் நீரை கொண்டு செல்லும் கால்வாய் சுவர் இடிந்து விழுந்ததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது, அனல்மின் நிலையத்தின் கொதிகலனை குளிர்விக்க கடல் நீரை உள்ளே கொண்டு செல்லும் கால்வாய் இடிந்ததால் 6 மாதங்களுக்கு முன்பு பல கோடி ரூபாய் செலவில் புதிய கால்வாய் அமைக்கப்பட்டது.

இருப்பினும் கடந்த 3 நாட்களில் பெய்த மழையில், அனல் மின் நிலையத்தின் மூன்று யூனிட்டுகளுக்கு கடல் நீர் கொண்டு செல்லும் கால்வாயில், சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சாம்பல் கழிவுகள் உள்ளே புகுந்தது. இதனால் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, சுமார் 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்