ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் முடித்து விட்டு ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றார் பிரதமர் மோடி

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார்.

Update: 2024-01-20 03:50 GMT

ராமேஸ்வரம்,

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா நாளை மறுநாள் நடக்கிறது. அங்குள்ள கருவறையில், குழந்தை வடிவிலான பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதற்காக அவர் தற்போது தீவிர விரதம் இருந்து வருகிறார்.

அதற்கிடையில் பிரதமர் மோடி, ராமருடன் தொடர்புடைய திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில் மற்றும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். காலையில் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்த மோடி, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராமேசுவரத்திற்கு பகல் 2.30 மணிக்கு வந்தடைந்தார்.


 



இங்கு ராமகிருஷ்ண மடத்தில் சிறிது நேரம் ஒய்வெடுத்த மோடி, கார் மூலம் சரியாக 3.20 மணிக்கு அக்னி தீர்த்த கடலுக்கு வந்தார். அங்கு அவர் 3 முறை கடலில் முழ்கி எழுந்தார்அதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுக்கு சென்று மோடி புனித நீராடினர். தொடர்ந்து மோடி, கோவில் பிரகாரம் முழுவதும் சுற்றி வந்தார்.

அதன்பின் மோடி, கோவில் தெற்கு வாசலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ராமயாணம் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து மோடி, இரவு ராம கிருஷ்ண மடத்திற்கு சென்றார். இன்று இரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்கும் பிரதமர் மோடி, நாளை காலை தனுஷ்கொடி அரிச்சல்முனை செல்கிறார். அங்கு அவர் புனித நீராடி, சிறப்பு பூஜை செய்கிறார். பின்னர் கோதண்டராமர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார். பின்னர் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Live Updates
2024-01-20 12:49 GMT

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடினார். தொடர்ந்து சாமி தரிசனம் செய்து விட்டு கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கோவிலில் பாடப்படும் பஜனைகளை ஆர்வமுடன் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் முடித்து விட்டு ராமகிருஷ்ண மடத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.

2024-01-20 12:38 GMT

ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்தக் கிணறுகளில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி தன் கையாலேயே கிணற்றில் இருந்து இரைத்து புனித நீரை ஊற்றினார்.

2024-01-20 11:59 GMT



2024-01-20 11:12 GMT


அக்னி தீர்த்தக் கடலில் நீராடிய பின் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்கு பின் பிரதமர் மோடி, கோவில் பிரகாரத்தை வலம் வந்து வழிபாடு மேற்கொண்டார்.

2024-01-20 10:57 GMT



2024-01-20 09:53 GMT

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் அக்னி தீர்த்த கடலில் பிரதமர் மோடி நீராடி வருகிறார். ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் மோடி நீராடி வருகிறார்.

2024-01-20 09:33 GMT

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு பிரதமர் மோடி, ராமேஸ்வரம் சென்றார். ராமநாதபுரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் மோடியை வரவேற்க சாலையின் இருபுறமும் தொண்டர்கள் காத்திருந்தனர்.

தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி மோடி சென்றார். பிரதமர் மோடிக்கு வழி நெடுக நின்ற பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு பிரதமர் மோடி கோவிலுக்கு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

2024-01-20 08:41 GMT

ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி ராமேஸ்வரம் சென்றடைந்தார்

2024-01-20 07:37 GMT

ராமேஸ்வரம் புறப்பட்டார் பிரதமர் மோடி:-

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டார்.  

2024-01-20 07:14 GMT

கம்ப ராமாயணத்தை கேட்டு ரசித்த பிரதமர் மோடி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி கம்ப ராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் கம்பர் ராமாயணத்தை கேட்டு ரசித்தார்.



Tags:    

மேலும் செய்திகள்