திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்த... ... ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் முடித்து விட்டு ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றார் பிரதமர் மோடி
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு பிரதமர் மோடி, ராமேஸ்வரம் சென்றார். ராமநாதபுரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் மோடியை வரவேற்க சாலையின் இருபுறமும் தொண்டர்கள் காத்திருந்தனர்.
தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி மோடி சென்றார். பிரதமர் மோடிக்கு வழி நெடுக நின்ற பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு பிரதமர் மோடி கோவிலுக்கு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Update: 2024-01-20 09:33 GMT