ராமேஸ்வரம்,அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா நாளை மறுநாள் நடக்கிறது. அங்குள்ள கருவறையில், குழந்தை வடிவிலான பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதற்காக அவர் தற்போது தீவிர விரதம் இருந்து வருகிறார். அதற்கிடையில் பிரதமர் மோடி, ராமருடன் தொடர்புடைய திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில் மற்றும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். காலையில் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்த மோடி, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராமேசுவரத்திற்கு பகல் 2.30 மணிக்கு வந்தடைந்தார். இங்கு ராமகிருஷ்ண மடத்தில் சிறிது நேரம் ஒய்வெடுத்த மோடி, கார் மூலம் சரியாக 3.20 மணிக்கு அக்னி தீர்த்த கடலுக்கு வந்தார். அங்கு அவர் 3 முறை கடலில் முழ்கி எழுந்தார்அதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுக்கு சென்று மோடி புனித நீராடினர். தொடர்ந்து மோடி, கோவில் பிரகாரம் முழுவதும் சுற்றி வந்தார். அதன்பின் மோடி, கோவில் தெற்கு வாசலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ராமயாணம் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து மோடி, இரவு ராம கிருஷ்ண மடத்திற்கு சென்றார். இன்று இரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்கும் பிரதமர் மோடி, நாளை காலை தனுஷ்கொடி அரிச்சல்முனை செல்கிறார். அங்கு அவர் புனித நீராடி, சிறப்பு பூஜை செய்கிறார். பின்னர் கோதண்டராமர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார். பின்னர் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.