போதை பொருட்கள் குறித்து தகவல் தெரிவிக்க 'வாட்ஸ் அப்' எண் அறிமுகம்

போதை பொருட்கள் குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-08-20 16:06 GMT

திருவண்ணாமலை

போதை பொருட்கள் குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் குறித்து தகவல் தெரிவிக்க 'வாட்ஸ் அப்' எண்ணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் அறிமுகம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஏற்கனவே போதைப் பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்க 9159616263 என்ற 'வாட்ஸ் அப்' எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்களை தெரியப்படுத்தலாம். தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும். இந்த நடவடிக்கைக்காக மாவட்டம் முழுவதும் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணானது முழுவதுமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கட்டுப்பாட்டில் இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்