கூடலூர், போடி பகுதிகளில்பூத்துக்குலுங்கும் மாமரங்கள்

கூடலூர், போடி பகுதிகளில் மாமரங்கள் பூத்துக்குலுங்குகின்றன.

Update: 2023-02-19 18:45 GMT

 கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பகுதிகளான காக்கான் ஓடை, பகவதி அம்மன் கோவில் பிரிவு, பெருமாள் கோவில் புலம், பளியங்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் மா மரங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதிகளில் காசா, கல்லாமை, மல்கோவா, செந்தூரம் உள்ளிட்ட பல்வேறு வகை மா மரங்கள் அதிக அளவில் காய்க்கும். முதன் முதலாக காய்க்கும் பூ பிஞ்சுகளை விவசாயிகள் உதிர்த்து விடுகின்றனர். இதனால் அடுத்து வரும் ஆண்டுகளில் மா மரங்களின் பூக்கும் தன்மை அதிகரிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது.

தற்போது இப்பகுதிகளில் உள்ள மாமரங்களில் அதிகளவு பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. பிஞ்சுகளும் அதிக அளவில் பிடித்து உள்ளது. மேலும் காய்கள் உதிராமல் இருக்க பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பிஞ்சு, காய்கள் பிடிக்கும் பருவத்தில் வியாபாரிகள் வந்து மா மரங்களை குத்தகைக்கு எடுக்கின்றனர். பின்னர் மாங்காய்களை பறித்து வெளிமார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இதேபோல் போடி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளான குரங்கணி, பிச்சாங்கரை, வலசை, ஊத்தாம்பாறை, உலகுருட்டி, சேரடிப்பாறை, கொட்டக்குடி ஆகிய இடங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள மாமரங்கள் பூத்துக்குலுங்குகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்