கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரிபொருளியல்துறை முன்னாள் மாணவியர் சந்திப்பு

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி பொருளியல்துறை முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-05-15 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பொருளியல் துறையில் 1994-1997 ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். முன்னாள் மாணவி பெட்ரிஷியா ஜாஸ்மின் வரவேற்று பேசினார். இதில் பொருளியல் துறை முன்னாள் தலைவர் ஜெயலட்சுமி, பேராசிரியைகள் சிந்து, பெரில் ஆர்.எஸ்.ராணி, ஜெயந்தி மற்றும் தமிழ்த்துறை தலைவர் ஜான்சி ராணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். பின்னர் முன்னாள் மாணவி ராஜாத்தி, கல்லூரியில் படித்த அனுபவங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து முன்னாள் மாணவியர் அனைவரும், தங்கள் தோழிகளுடன் தம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவியரின் சார்பில் பொருளியல் துறைக்கு பிரோல் மற்றும் சுவர் கடிகாரம் வழங்கப்பட்டது. தங்களுக்கு கற்றுக்கொடுத்த பேராசிரியைகளுடன் முன்னாள் மாணவியர் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவியிரன் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மதிய உணவிற்கு பின், முன்னாள் மாணவியர், தாங்கள் படித்த கல்லூரியை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்