ஏரியில் பெண் பிணம்

கீழ்பென்னாத்தூர் அருகே ஏரியில் பெண் பிணம் கிடந்தது. அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-17 09:46 GMT

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரை அடுத்த கரிக்கலாம்பாடி கிராமத்தில் உள்ள ஏரியில் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதப்பதாக கீழ்பென்னாத்தூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழுகிய நிலையில் இறந்து கிடந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை.

மர்மமான முறையில் இறந்த கிடந்த பெண்ணை யாராவது கொலை செய்து விட்டு ஏரியில் வீசிவிட்டு சென்றனரா? என்பது குறித்தும் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்