சென்னை: தரமற்ற உணவால் மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு - பாலிடெக்னிக் விடுதி கேண்டீனுக்கு சீல்

தரமற்ற உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பாலிடெக்னிக் விடுதி கேண்டீனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2024-07-04 15:38 GMT

சென்னை,

சென்னை வேப்பேரியில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியின் விடுதி கேண்டீனில் உணவு தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும், இதனை சாப்பிட்ட மாணவர்களுக்கு கடந்த 2 நாட்களாக வாந்தி - பேதி உள்ளிட்ட உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகவும் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் என்.ராஜா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் விடுதிக்கு சென்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

இதில் கேண்டீனில் உள்ள உபகரணங்கள் சுகாதாரமின்றி இருந்ததும், உணவுகள் தரமற்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கேண்டீனும் உடனடியாக மூடி சீல் வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்