கள்ளச்சாராய விவகாரம்: கல்வராயன் மலையில் புதிதாக 4 சோதனை சாவடிகள்
கல்வராயன் மலையில் இருந்து நகர்ப்புறங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்துவதை தடுக்க, மலை அடிவார பகுதிகளில் புதிதாக 4 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வராயன் மலையில் இருந்து நகர்ப்புறங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்துவதை தடுக்க, மலை அடிவார பகுதிகளில் புதிதாக 4 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.கல்வராயன் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை தடுக்க, 100க்கு மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பன்னிப்பாடி செல்லும் சாலை, வெள்ளி மலை செல்லும் சாலை, மூலக்காடு, சிறுவாச்சூர் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சோதனை சாவடியில் 4 போலீசார் வீதம் 16 பேலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.