உலக தாய்ப்பால் வார விழா
ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.
ஊட்டி,
உலக தாய்ப்பால் வார விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இதற்கு டாக்டர் அஸ்லாம் தலைமை தாங்கினார்.
இதில் தாய்ப்பாலின் அவசியம் குறித்து அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு விளக்கினர். இதேபோல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வார விழா நடந்தது. இதற்கு டீன் மனோகரி தலைமை தாங்கினார். இதில் கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, வினாடி-வினா ேபாட்டி நடத்தப்பட்டது.