உலக தாய்ப்பால் வார விழா
திருப்பத்தூரில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் ரோட்டரி சங்கம், எல்.எஸ். மருத்துவமனை மற்றும் நியோஸ்டார் லைப் சயின்சஸ் இணைந்து உலக தாய்பால் வார விழா எல்.எஸ். மருத்துவமனையில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் எல்.ஆனந்தன் தலைமை தாங்கினார். ஏலகிரி செல்வம், கே.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக காமராஜர் நூற்றாண்டு அறக்கட்டளை தலைவர் பி.கணேஷ்மல் கலந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி பேசினார்.
விழாவை டாக்டர் லீலாசுப்பிரமணியம் தொடங்கி வைத்து, தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம் குறித்து விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் டாக்டர்கள் எம்..பிரபவராணி, டி.சற்குணபிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் என்.சங்கர் நன்றி கூறினார்.