அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் நெல்லை சரக டி.ஐ.ஜி. ஆய்வு
அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஆய்வு செய்தார்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர், ஆய்க்குடி, இலத்தூர் மற்றும் சாம்பவர் வடகரை ஆகிய போலீஸ் நிலையங்கள் அடங்கிய அச்சன்புதூர் சர்க்கிள் போலீஸ் நிலையம் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் நிலையம் ஆகியவற்றில் நெல்லை சரக டி.ஐ.ஜி.பிரவேஷ் குமார் ஆய்வு செய்தார். அப்போது குற்ற வழக்கு கோப்புகள், புகாா் மனு பதிவேடு, நிலுவையில் உள்ள வழக்குகள், முதல் தகவல் அறிக்கை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை பாா்வையிட்டாா்.
அனைத்து கோப்புகளையும் சரிவர முறையாக பராமரித்து வந்த காவல்துறையினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், தென்காசி துணை சூப்பிரண்டு மணிமாறன், அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இறுதியில் ஆய்குடி போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மரக்கன்று நட்டார்.