அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கோட்டையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-16 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி துணைச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, மாவட்ட பொருளாளா் சண்முகையா, மாவட்ட இணைச்செயலாளா் சண்முகபிரியா, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளா் கண்ணன் (எ) ராஜா, மாவட்ட விவசாய பிரிவு அணி செயலாளா் பரமகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன் வரவேற்றார். அதனை தொடா்ந்து மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பபட்டது.

ஆர்ப்பாட்டத்தி்ல் ஒன்றியச்செயலாளா்கள் எஸ்ஆர்.ராமச்சந்திரன், வசந்தம் முத்துப்பாண்டியன், செல்லப்பன், ஜெயக்குமார், துரைப்பாண்டியன், மகாராஜபாண்டியன், ரமேஷ், வேல்முருகன், செல்வராஜ், வாசுதேவன், நகரச்செயலாளா்கள் எம்கே.முருகன், ஆறுமுகம், பரமேஸ்வரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினா்கள் சங்கரன்கோவில் காளிராஜ், வாசுதேவநல்லூர் தங்கம்பிச்சை, பேரூர் கழகச்செயலாளா்கள் டாக்டா் சுசிகரன் வடகரை அலியார், புதுார் பாலசுப்பிரமணியன், ஆய்க்குடி முத்துக்குட்டி, பண்பொழி கார்த்திக் ரவி, சாம்பவா்வடகரை நல்லமுத்து, ராயகிரி சேவுகபாண்டியன், செங்கோட்டை நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி, துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினா்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள், மாவட்ட பிரதிநிதிகள், வார்டு பிரதிநிதிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் செங்கோட்டை நகரச்செயலாளா் கணேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்