மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது

Update: 2023-04-30 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு போலீசார் தாமரைகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்ததாக கிணத்துக்கடவு அருகே உள்ள செட்டியக்காபாளையத்தை சேர்ந்த தங்கராஜ்(வயது 60) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று மது விற்பனை செய்ததாக உதயகுமார் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்