புதுக்கோட்டையில் ஆங்கிலேயர் காலத்தில் தமிழில் எழுதப்பட்ட மைல் கல் கண்டெடுப்பு

மைல்கல்லில் தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

Update: 2024-10-04 23:58 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ்துறை தலைவரும், தொல்லியல் வரலாற்று பேராசிரியருமான காளிதாஸ், டாக்டர் சிவசக்தி கொண்ட குழுவினர் தொல்லியல் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் தேனிபட்டி-அரிமளம் சாலையில் உள்ள ஆங்கிலேயர் காலத்திலான மைல் கல்லை ஆய்வு செய்தனர்.

இந்த கல்வெட்டில், "நாட்டான்பட்டி 04 பர்லாங்" என்று இருபுறமும் குறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ''1680 முதல் 1948-ம் ஆண்டு வரை புதுக்கோட்டை பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு ராஜ்யமாகவும், பின்னர் ஒரு சமஸ்தானமாகவும் இருந்து வந்தது. அப்போது சாலையோர கற்களில் பர்லாங் என்றே குறிக்கப்பட்டு வந்தது.

ஒரு பர்லாங்கு என்பது 1/8 மைல் அல்லது 660 அடிகள், அல்லது 0.201168 கி.மீ. என்ற அளவையில் வரும். நாட்டான்பட்டி என்ற ஊர் 0.4 பர்லாங்கு என்று குறிக்கப்பட்டுள்ளதால், இக்கல் அமைந்துள்ள இடத்திலிருந்து நாட்டான்பட்டி ஒரு மைல் தொலைவு உள்ளதை குறிப்பிடும். இந்த மைல்கல்லில் தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இது போன்ற வரலாற்று தடயங்களை பாதுகாக்க வேண்டியது பொதுமக்களாகிய நம்முடைய கடமை'' என்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்