அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை கடந்துள்ளது.;

Update: 2025-01-03 04:29 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடருகிறது. கடந்த மாதம் (டிசம்பர்) 24-ந்தேதி முதல் தொடர்ந்து விலை அதிகரித்து வந்து, 28-ந்தேதி விலை குறைந்து காணப்பட்டது. 30-ந்தேதி மீண்டும் விலை அதிகரித்து, மறுநாள் (31-ந்தேதி) குறைந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்