குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் தட்டுப்பாடு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் .

Update: 2024-10-04 16:30 GMT

சென்னை ,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

ஒன்றரை வயது முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கு போடப்படும் டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் கக்குவான் இருமல்(DPT Diphtheria-pertussis-tetanus) எனும் தடுப்பூசி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த இரண்டு மாதங்களாக தட்டுப்பாட்டில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் தடுப்பூசி போட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசி மருந்து இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்புவதாக செய்திகள் வருகின்றன.

அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிரோடு விளையாடுவதையே தொழிலாகக் கொண்ட மு.க. ஸ்டாலினின் தி.மு.க. அரசு பிஞ்சு குழந்தைகளின் நலத்தோடும் விளையாடுவதை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டிக்கிறேன்.

உடனடியாக அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இத்தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்