கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் தொடங்கிய மின் உற்பத்தி

முதல்கட்டமாக 360 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

Update: 2024-10-05 00:06 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதலாவது அணு உலையில் கடந்த 1-ந்தேதி திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து முதலாவது அணு உலையில் தொழில்நுட்ப கோளாைற சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.நேற்று காலையில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. முதல்கட்டமாக 360 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்