ஓம் காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

பள்ளிபாளையம் ஓம் காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2022-12-24 18:46 GMT

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் காவிரி கரையோரம் ஓம் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலில் மாலை அய்யப்ப பஜனை மற்றும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். பூஜை முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அய்யப்ப பக்தர்கள் மற்றும் கோவில் கமிட்டியினர் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்