வீரமகா காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

அம்மாப்பேட்டை வீரமகா காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-08-13 20:48 GMT

அம்மாப்பேட்டை:

அம்மாப்பேட்டை மார்வாடி தெருவில் உள்ள ஸ்ரீ வீரமகா காளி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக கோவில் வளாகத்தில் பெண் பக்தர்கள் 108 திருவிளக்குகளை ஏற்றி வைத்து மங்கள பொருட்களால் பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். இந்த விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு குலுக்கல் முறையில் விளக்குகள், பட்டுப் புடவைகள், பித்தளை செம்புகள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு அசோக்குமார் உள்பட பலர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்