காடுகளை பாதுகாக்க ரூ.600 கோடி நன்கொடை

கனடாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் காடுகளை பாதுகாக்க ரூ.600 கோடியை நன்கொடையாக வழங்கி உலகின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

Update: 2022-09-29 14:22 GMT

உலக பணக்கார பட்டியலில் 13-வது இடத்தில் இருப்பவரும், கனடாவின் பிரபல தொழிலதிபருமான சிப் வில்சன், லுலுலேமன் அத்லெட்டிகா என்ற நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார்.

வன நிலங்களின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எதிர்கால சந்ததியினர் பற்றி ஆழ்ந்து சிந்தித்த இவர், தனது சொத்தில் 76 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.

தான் அளித்த நன்கொடை பற்றி கருத்து தெரிவித்த அவர், ''வன நிலங்களைப் பாதுகாப்பது என்பது அனைவரது கடமை. அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் உதவி. இதற்காக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. நன்கொடை காரணமாக வன நிலங்கள் பூங்காக்களாக மாறும்'' என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்