"குஜராத் தேர்தலில் பயன்படுத்தியதை இங்கே பயன்படுத்தக்கூடாது.." கர்நாடக காங்கிரஸ் தலைவர் அதிரடி

குஜராத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கர்நாடகா தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது என கர்நாடக மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

Update: 2023-03-30 06:41 GMT

பெங்களூரு,

குஜராத் தேர்தலில் பயன்படுத்திய மின்னணு வாக்கு இயந்திரங்களை கர்நாடக தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது என கர்நாடக மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், தேர்தல் ஆணையத்திடம் குஜராத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கர்நாடகா தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்யும் போது, அதன் உண்மை தன்மையை நேரில் வந்து தெரிந்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாக தெரிவித்தார். தாங்கள் சென்று அதை பரிசோதித்த பிறகு அடுத்த கட்ட முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்