சிவமொக்கா - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் ராகவேந்திரா எம்.பி. கோரிக்கை

சிவமொக்கா - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க வேண்டும் என்று ராகவேந்திரா எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2023-05-24 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க வேண்டும் என்று ராகவேந்திரா எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.

ராகவேந்திரா எம்.பி.

தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் தென்கிழக்கு ரெயில்வே மண்டல தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு தென்கிழக்கு ரெயில்வே மண்டல தலைமை அதிகாரியாக சஞ்சீவ் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ரெயில்வே பணிகள் குறித்து நேற்று உப்பள்ளியில் உள்ள தென்கிழக்கு ரெயில்வே மண்டல அலுவலகத்தில், அதிகாரி சஞ்சீவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிவமொக்கா நாடாளுமன்ற உறுப்பினர் ராகவேந்திரா கலந்து கொண்டு சிவமொக்காவில் நடந்து வரும் ரெயில்வே பணிகள் குறித்து பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

ஆலோசிக்க வேண்டும்

2023-2024-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டில் சிவமொக்காவுக்கு அறிவிக்கப்பட்ட ரெயில்வே திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்க வேண்டும். பட்ஜெட்டில் கூறியபடி சிவமொக்கா, சாகர் மற்றும் தாளகொப்பா ரெயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட வேண்டும். சிவமொக்கா - சிகாரிபுரா இடையே புதிய ரெயில் இயக்கப்பட வேண்டும். 2025-ம் ஆண்டுக்குள் இந்த பணிகள் முடிவடைய வேண்டும்.

மேலும் சிவமொக்காவில் ரூ.21.10 கோடி, சாகரில் ரூ33 கோடி, தாளகொப்பாவில் ரூ.19.28 கோடி செலவில் ரெயில் நிலையங்களை புதுப்பிக்க வேண்டும். அதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கோரிக்கை

மேலும் பெங்களூரு - சிவமொக்கா இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட வேண்டும். இது எனது கோரிக்கை ஆகும். சிவமொக்கா நகரில் காசிபுரா, சவலங்கா சாலை மற்றும் குருபுரா பகுதிகளில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகள் வருகிற டிசம்பருக்குள் முடிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்