உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் நெருக்கடி; தானே மாநகராட்சி சிவசேனா உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு!

தானே மாநகராட்சி உறுப்பினர்களாக இருந்து வந்த மொத்தம் 67 சிவசேனா உறுப்பினர்களில், 66 பேர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Update: 2022-07-07 15:15 GMT

மும்பை,

மும்பையை ஒட்டியுள்ள தானே மாநகராட்சியில், மேயர் மற்றும் துணை மேயராக சிவ சேனா கட்சியை சேர்ந்தவர்கள் இருந்து வந்தனர். இந்நிலையில், தானே முனிசிபல் கார்ப்பரேஷனின் அறுபத்தாறு சிவசேனா முன்னாள் உறுப்பினர்கள் இன்று மராட்டிய மாநில புதிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே முகாமுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணிக்கு மேலும் ஒரு அடியாகும்.

சிவசேனாவின் கோட்டையாக இருந்த 131 உறுப்பினர்களைக் கொண்ட தானே மாநகராட்சியில், உறுப்பினர்களின் பதவிக்காலம் சில காலத்திற்கு முன்பு முடிவடைந்து, அதன் தேர்தல் நடைபெற விரைவில் உள்ளது.

இந்நிலையில், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் அலுவலக செய்திக்குறிப்பில், தானே மாநகராட்சி முன்னாள் மேயர் நரேஷ் மஸ்கே தலைமையில், 66 சிவசேனா முன்னாள் உறுப்பினர்கள் முதல்-மந்திரியை சந்தித்து அவருக்கு ஆதரவளித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானே மாநகராட்சி உறுப்பினர்களாக இருந்து வந்த மொத்தம் 67 சிவசேனா உறுப்பினர்களில், 66 பேர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்