இந்தியாவில் நேற்று சற்று குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தற்போது 10 ஆயிரத்துக்கு அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

Update: 2023-04-23 23:18 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் 10 ஆயிரத்துக்கு அதிகமானோருக்கு இப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதில் ஏற்ற இறக்கமான சூழலும் காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 193 பேருக்கு தொற்று ஏற்பட்டது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 112 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டது. தொற்று பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 91 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 9 ஆயிரத்து 833 பேர் மீண்டனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 42 லட்சத்து 92 ஆயிரத்து 854 பேர் மீண்டனர். தொற்றினால் நேற்று முன்தினம் 42 பேர் பலியாகினர். நேற்று இந்த எண்ணிக்கை 29 ஆக குறைந்தது. அதுவும் கேரளாவில் விடுபட்ட கொரோனா பலிகளில் 7-ஐ கணக்கில் சேர்த்ததும் அடங்கும்.

டெல்லியில் 6 பேரும், மராட்டியத்தில் 5 பேரும், உ.பி., ராஜஸ்தான், பஞ்சாப், இமாசலபிரதேசம் ஆகியவற்றில் தலா 2 பேரும், தமிழ்நாடு, கேரளா, குஜராத்தில் தலா ஒருவரும் தொற்றால் நேற்று இறந்துள்ளனர். தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 250 அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 67 ஆயிரத்து 806 பேர் தொற்று மீட்பு சிகிச்சையில் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்