முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் கே.சந்திரசேகர ராவ்
பெரும்பான்மைக்குத் தேவையான 60 இடங்களுக்கும் மேல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.;
ஐதராபாத்,
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வருகிறது.
பெரும்பான்மைக்குத் தேவையான 60 இடங்களுக்கும் மேல் காங்கிரஸ் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் தெலுங்கானாவில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, முதல்-மந்திரி பதவியை கே.சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்தார். சந்திரசேகர ராவின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.