ராமநகர் அருகே தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை
ராமநகர் அருகே தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு:
ராமநகர் மாவட்டம் குதூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நெலமங்களா-குனிகல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். மரத்தின் அருகே ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதுபற்றி அறிந்ததும் குதூர் போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவர், ஹாசன் மாவட்டம் கும்பேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த கோபால் (வயது 22) என்று தெரிந்தது. இவர், பி.யூ.சி. 2-வது ஆண்டு படித்து முடித்திருந்தார். ஐ.டி.ஐ.யும் கோபால் படித்திருந்தார். மேலும் வக்கீல் படிக்க அவர் விரும்பி இருந்தார்.
ஆனால் கோபாலுக்கு வக்கீல் படிக்க கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் மனம் உடைந்து வாழ்ந்து வந்தார். இதையடுத்து, தனது சகோதரர், நண்பர்களுக்கு தனக்கு வாழ பிடிக்கவில்லை, தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று வீடியோவில் பேசி கோபால் அனுப்பி வைத்துவிட்டு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து குதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.