தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை
கலபுரகியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்த நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
கலபுரகி:
கலபுரகி மாவட்டம் ரட்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சந்தனகெரே கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 20). கூலி தொழிலாளி. இவரது நண்பர்கள் ஆனந்த் மற்றும் பீமா. இந்த நிலையில் மோகன் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அந்த பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது மோகனுக்கும் அவரது நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மோகனை அவரது நண்பர்கள் தாக்கி கீழே தள்ளி, தலையில் கல்லை போட்டனர். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ரட்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.