கெஜ்ரிவால் ஜாமீனுக்கு எதிரான வழக்கு: ஜன. 17ம் தேதி டெல்லி ஐகோர்ட்டு விசாரணை

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் ஜனவரி 17ம் தேதி விசாரணை நடக்க உள்ளது.;

Update:2024-12-11 15:27 IST

டெல்லி,

டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மாநில அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் கடந்த ஜூன் 26ம் தேதி சிறையில் வைத்தே சிபிஐ கைது செய்தது.

அதேவேளை, இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை 12ம் தேதி கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, கடந்த ஜூலை 13ம் தேதி திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் விடுதலையானார்.

இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேட்டில் பதியப்பட்டுள்ள பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்