'பாரதியார் கற்பனை செய்த தேசிய ஒருமைப்பாட்டை போற்றி கொண்டாடுவோம்' - பவன் கல்யாண்

பாரதியார் கற்பனை செய்த தேசிய ஒருமைப்பாட்டை போற்றி கொண்டாடுவோம் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-11 11:28 GMT

அமராவதி,

மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பாரதியாரை போற்றும் வகையில் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

"புகழ்பெற்ற கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தொலைநோக்கு சிந்தனையாளரும், காலத்தால் அழியாத தனது எழுத்துகளால் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தியவருமான சுப்பிரமணிய பாரதியாரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன்.

இனிய தெலுங்கு மெல்லிசைகளைப் பாடி, வணிகப் படகுகளில் பயணம் செய்து, கங்கையின் கோதுமையை காவேரியின் பொக்கிஷங்களுக்காக பரிமாறுவோம் என்று பாரதியார் கற்பனை செய்த இந்திய தேசிய ஒருமைப்பாட்டை நாம் போற்றி கொண்டாடுவோம்."

இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்