பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கிய நாளில் இருந்து, அதானி லஞ்ச விவகாரத்தை எழுப்பி, தினமும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (வியாழக்கிழமை) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 1 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அரசின் சில முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.