அரியானாவில் தந்தை இறந்த சோகத்தில் விஷம் குடித்து மகன் தற்கொலை

அரியானா மாநிலம் சோனிபட்டில் தந்தை இறந்த சோகத்தில் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-08 23:22 GMT

சோனிபட்,

அரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த ஜக்பீர் என்பவர் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் சாலை மறியல் சம்பவத்தில் அவர் உயிரிழந்தார். தந்தை இறந்த சோகத்தில் அவரது மகனும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஜக்பீர் உயிரிழப்பால் ஆத்திரமடைந்த சாலைப் பணியாளர்கள், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்திர பவார் உயிரிழந்தவரின் குடும்பத்தினரையும், சாலைப் பணியாளர்களையும் சந்தித்தார். இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததே, ஜக்பீரின் மகனை தற்கொலை செய்ய தூண்டியுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.

அரியானா அரசை விமர்சித்த அவர், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், சோனிபட்டில் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அதைத் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்